ஒற்றைத் தலைமையின் கீழ்தான் அனைத்து கட்சிகளும் இயங்குகின்றது. அதை அதிமுகவினர் வலியுறுத்தினாலும், இவர் தான் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என என்னால் கூற முடியாது.
அதிமுக ஒற்றை தலைமை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது, ‘அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் சரியான ஒன்றுதான். நாடு முழுவதிலும் எந்த கட்சியிலும் இதுபோன்ற இரட்டைத் தலைமை இல்லவே இல்லை.

மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
ஓபிஎஸ் Vs இபிஎஸ்
ஒற்றைத் தலைமையின் கீழ்தான் அனைத்து கட்சிகளும் இயங்குகின்றது. அதை அதிமுகவினர் வலியுறுத்தினாலும், இவர் தான் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என என்னால் கூற முடியாது. பெரும்பான்மை யாரிடம் உள்ளதோ அவர்கள் ஒற்றை தலைமைக்கு வர வாய்ப்பு உள்ளது. அப்படி கட்சியினரின் பெரும்பான்மையுடன் ஒற்றைத் தலைமையாக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மக்கள் மத்தியிலும் அவர் வெற்றி பெற்றால் மட்டுமே தலைவராக நீடிக்க முடியும்.
எம்ஜிஆர்
அதிமுக எம்ஜிஆர் மறைவின்போதே சந்தித்துள்ளது. அதனால் அதிமுகவுக்கு இது புதிதல்ல. அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்து களத்தில் இறக்கியுள்ளோம். இந்தத் தேர்தலின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். யஷ்வந்த் சின்ஹாவின் பொதுச் சேவை நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் பாஜக அரசு அடித்தட்டு மக்களை வஞ்சித்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !

மத்திய அரசு
விவசாயப் பொருட்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியுள்ளது கண்டனத்துக்குரியது. அக்னிபத் திட்டத்தில் தற்போது இளைஞர்கள் சேர்ந்து வருவது அவர்களது ஏழ்மையால் மட்டுமே. இந்த பணிக்கு செல்வது, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது’ என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்
