Asianet News TamilAsianet News Tamil

டெல்லிக்கு சென்று இத்தனை வருஷம் ஆச்சு, நான் இந்தி கற்றுக் கொள்ளவில்லை..!! கனிமொழி அவேசம்..!!

எல்லா இடங்களில் இப்படி இருக்க கூடிய மனப்பான்மையை சரி செய்தால் நிச்சயமாக சாதாரண மக்களும் இந்தியர்கள் தான். அவர்களுக்கும் நாட்டில் மரியாதை இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும்.

After going to Delhi for so many years, I have not learned Hindi, ksnimozi aggressive.
Author
Chennai, First Published Aug 12, 2020, 7:12 PM IST

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- 

சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் நம்முடைய உணர்வுகளை புரிந்து கொண்டு சி.ஐ.எஸ்.எப்.  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது தமிழகத்தில் மட்டும் நடக்கும் பிரச்சனை அல்ல. பல இடங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களில் இருக்க கூடிய பிரச்சனை. எல்லா இடங்களில் இப்படி இருக்க கூடிய மனப்பான்மையை சரி செய்தால் நிச்சயமாக சாதாரண மக்களும் இந்தியர்கள் தான். அவர்களுக்கும் நாட்டில் மரியாதை இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும். மாநில உரிமைகளையும் ஒவ்வொரு மாநில மொழிக்கும் உரிய இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையை தரும்.

After going to Delhi for so many years, I have not learned Hindi, ksnimozi aggressive.

 நான் இதுவரை யாருக்கும் இந்தியில் மொழியாக்கம் செய்து பேசியதே கிடையாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கூட பேசியதாக நினைவு கூட இல்லை. இந்தி தெரிந்ததால் தான் மொழியாக்கம் செய்து பேச முடியும். நான் படித்த பள்ளியில் 2 மொழி தான். ஆங்கிலம், தமிழ் மட்டும் படித்தேன். டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை. இது எல்லா தலைவர்களுக்கும் தெரியும். நான் தான் இந்தியில் மொழிபெயர்ந்ததாக கூறினால் அதை நிரூபிக்க வேண்டும். எனக்கோ வேறு யாருக்கோ இந்தி தெரியுமா தெரியாதா அதை தாண்டி இந்தி தெரிந்தால் தான் இந்தியர்களா இருக்க முடியும் என சொல்வது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

After going to Delhi for so many years, I have not learned Hindi, ksnimozi aggressive. 

அதை புரிந்து கொள்ளாமல் எனக்கு இந்தி தெரியுமா, தெரியாதா மொழிபெயர்ப்பு செய்தேனா என்பது பெரிய விஷயம் கிடையாது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூட தனக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக பகிர்ந்து உள்ளார். குமாரசாமி உள்பட பலர் தங்களுடைய உணர்வுகளை சம்பவங்களை பகிர்ந்து உள்ளனர். எல்லாருக்கும் இந்தி தெரியுமா தெரியாதா என்பதில்லை. இந்தி தெரிந்தால் தான் இந்தியாவில் இருக்க முடியும். ஒரு மதத்தை பின்பற்றினால் தான் நாட்டில் இருக்க முடியும். ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றினால் தான் ஒரு கருத்தியலை ஏற்று கொண்டால் ஏற்றுக் கொள்வோம்  என்பதை தான் கண்டிக்கப்பட வேண்டும். திமுக-பாரதீய ஜனதா இடையே தான் போட்டி என சிலர் கனவு உலகில் வாழ வேண்டும் என்றால் வாழட்டும். அதைப்பற்றி கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios