Asianet News TamilAsianet News Tamil

எல்லாம் இருந்தும் எதற்காக மின்தடை ஏற்படுகிறது..? தவிக்கும் திமுகவுக்கு தங்கமணி கேள்வி..!

சென்னையில் புதைவடம் மூலம் மின்விநியோகம் செய்யப்படும் நிலையில் மின்தடை ஏற்பட காரணம் என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

After all, why is there a resistance ..? Gold question for the suffering DMK ..!
Author
Tamil Nadu, First Published Jun 19, 2021, 4:31 PM IST

4,000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைக்கும்போது மின்தடை ஏற்பட காரணம் என்ன? என மின்துறை முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.After all, why is there a resistance ..? Gold question for the suffering DMK ..!தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கொரோனா காலகட்டத்தில் பல்வேறு துறையில் இருப்பவர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிவதைக் கருத்தில்கொண்டு மாதாந்திர மின்தடை இனிமேல் இருக்காது என்றும், அதற்கு பதிலாக மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதந்தோறும் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பிரச்னை மீண்டும் தலைதூக்குவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. தினந்தோறும் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

After all, why is there a resistance ..? Gold question for the suffering DMK ..!

"4,000 மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைக்கும்போது மின்தடை ஏற்பட காரணம் என்ன? 10 நாளில் மின்தடை சரிசெய்யப்படும் எனக்கூறும் அமைச்சர் மே 7ஆம் தேதியிலிருந்து என்ன செய்து கொண்டிருந்தார்? சென்னையில் புதைவடம் மூலம் மின்விநியோகம் செய்யப்படும் நிலையில் மின்தடை ஏற்பட காரணம் என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios