Asianet News TamilAsianet News Tamil

23 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கேள்வியிலே திணறடித்த வைகோ... பிரதமர் மோடி மேசையை தட்டி ஆராவாரம்..!

23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் வைகோ கேட்ட முதல் கேள்விக்கு மேசையை தட்டி பிரதமர் மோட்டி உற்சாகமூட்டினார். 


 

After 23 years, the first question was Vaiko
Author
Tamil Nadu, First Published Jul 25, 2019, 3:14 PM IST

23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் வைகோ கேட்ட முதல் கேள்விக்கு மேசையை தட்டி பிரதமர் மோட்டி உற்சாகமூட்டினார். 

இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் தமிழில் உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் வைகோ. இதனையடுத்து கேள்வி நேரத்தின்போது, 347 ஆவது கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்து ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வைகோ துணைக்கேள்வி எழுப்பினார். அதற்கு முன் அவர், “அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.”  என அவர் சொன்னவுடன் அவையில் அமர்ந்து இருந்து பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார்.After 23 years, the first question was Vaiko

வைகோ நூற்பு ஆலைகள் குறித்துப் பேசியபோது, “பருத்தி விலை, பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று அமைச்சர் பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.After 23 years, the first question was Vaiko

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை ஏடுப்பாரா? சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகின்றார்கள். அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து  இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவிப்பாரா?”  எனக் கேள்வி எழுப்பினார். After 23 years, the first question was Vaiko

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, அது போல் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு வரி பதிலளித்தார். அதற்கு, ‘உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை’’ என வைகோ கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios