அதிமுக 2 தொகுதிகளில் வெற்றிபெற தாங்கள் தான் காரணம் என கூட்டணி கட்சிகள் பெருமிதம் காட்டி வர, பாஜக பிரச்சாரத்திற்கு வராததே முக்கியக் காரணம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் மோடி வந்து 2 நாட்கள் தங்கியதால் தான் 2 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது என பாஜக தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஆதரவு இல்லை என்றால் அதிமுக இடைத்தேர்தலில் வெற்றிபெற்றிருக்க முடியாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றிக்கு இவர்கள் உரிமை கொண்டாடும் அதே நேரத்தில்,  இந்த வெற்றி பாமகவால் கிடைத்தது.
 
ராமதாஸுக்கான வெற்றி என ஒரு தரப்பும், விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வந்ததால் கிடைத்த வெற்றி என மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதிர் கூட்டணியை சேர்ந்தவர்களோ, பாஜக பிரச்சாராத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதால் வந்த வெற்றி எனக் கூறி வருகின்றனர்.

பாரதிய ஜனதாவை ஒதுக்கியதால் தான் அதிமுக ஜெயித்தது என்று கூறுபவர்களுக்கு நாங்குநேரி இடைத்தேர்தலில் தெருவுக்குத் தெரு சென்று வைக்கப்பட்ட பிரச்சாரம், அதிமுக அரசின் சாதனைகள், பணபலத்தை கொண்டு , காங்கிரஸ் தொகுதியை மக்கள் கிட்டத்தட்ட 30000 வாக்குகளில் அதிமுக.,வுக்கு வெற்றி வித்தியாசமாக தருகிறார்கள். அதையும் தாண்டி நாங்குநேரியில் பாரதிய ஜனதாவுக்கு பங்குண்டு என்றே அர்த்தம் என்கிறார்கள்.

மாமல்லபுரத்திற்கு வந்த மோடி, தமிழராகவே மாறி வேட்டி, சட்டை, துண்டு போட்டதாலேயே பாஜக கூட்டணியில் அதிமுக விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்றது என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதுபோன்ற பதிவுகளுக்கு திமுகவினர் எதிர்ப்பதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.