admk woman mp sathyabama husband arrest in murder attempt case

அதிமுக எம்பி சத்தியபாமாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் எம்பி சத்தியபாமா. இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசித்துவருகிறார். இவருக்கும் வாசு என்பவருக்கும் இடையே கடந்த 1990ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், எம்பி சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது சகோதரியான சத்தியபாமாவை அவரது கணவர் வாசு, கொலை செய்ய முயன்றதாக புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வாசு மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெண் எம்பியை கணவரே கொலை செய்ய முயன்றதாக வழக்கு பதியப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.