மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது.

  

மக்களவைத் தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் என பலரும் விஜயகாந்தை சந்தித்தனர். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது.  

அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு தலைவர் சுதிஷ், பொருளாளர் பிரேமலதா, மற்றும் உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக விஜயகாந்த் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.