Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் சாதி அரசியல்..எடப்பாடி பழனிசாமி யார் தெரியுமா? ஓபிஎஸ்சை விளாசிய அதிமுக பிரமுகர்!

AIADMK : ஒபிஎஸ் தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் அவர் செய்ததில்லை' என்று கடுமையாக விமர்சித்தார்.

Admk trichy north secretary paranjothi against speech about o panneerselvam
Author
First Published Jun 27, 2022, 2:58 PM IST

இபிஎஸ் Vs ஓபிஎஸ்

சென்னையில் அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான். 

Admk trichy north secretary paranjothi against speech about o panneerselvam

காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாக கூறி ஒரு கடிதத்தை சி.வி சண்முகம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார். 

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

ஒற்றை தலைமை யார் ?

ஒற்றைத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தியே இந்த கடிதம் அளிக்கப்படுகிறது. இரட்டைத் தலைமையோடு திமுகவை வலுவாக எதிர்த்துப் போராட முடியவில்லை என்று குறிப்பிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறப்பட்டதற்கு மறுப்பும், கண்டனமும் தெரிவித்து சென்றார் வைத்தியலிங்கம். 

இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

ஓ.பன்னீர்செல்வம்

Admk trichy north secretary paranjothi against speech about o panneerselvam

இந்நிலையில் இன்று திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 'அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் ஒற்றை தலைமை வரவேண்டும் என்று கூறுகின்றனர் அவர்களது ஆதரவு அலை எடப்பாடி பழனிச்சாமிக்கு வீசுகிறது. அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்திலும் அது எதிரொலித்தது. எனவே ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டப உரிமையாளருக்கு கடிதம் எழுதுகிறார். 

அதிமுக பொதுக்குழு

இப்படி தொடர்ந்து கடிதம் எழுதி இந்த பொதுக்கூட்டத்தை தடை செய்ய நினைக்கிறார். சசிகலா, டிடிவி தினகரன், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரை நம்பி கட்சியை கொண்டு செல்ல திட்டமிடுகிறார் ஓபிஎஸ். எனவே அவரின் ஆசையை ஒரு போதும் நிறைவேறாது. ஒபிஎஸ் தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் அவர் செய்ததில்லை' என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios