அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக நிர்வாகிகள் மீது திமுகவினர் ஒரு கண் வைத்திருப்பதையும், விடுதலைச் சிறுத்தையை தேர்தல் வேலை முடக்கும் வகையில் அமைச்சர் சி.வி. சண்முகம் உத்தரவின் பேரில் அதிமுக நிர்வாகிகள் வலை விரித்ததில் அனாமத்தா வந்து சிக்கியுள்ளது விசிக.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாமகவின் வன்னியர் வாக்குகளையும், அக்கட்சி முக்கிய நிர்வாகிகளின் குடும்ப வாக்குகளையும் திமுகவினர் பேசி ஒட்டு வேட்டையாடி வருகின்றனர். இதையறிந்த அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க வாக்குகளை கைப்பற்ற தொகுதியில்  வலம் வருகிறாராம் 

விழுப்புரம் எம்பி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது பொறுப்பாளராக இருந்தவர் இப்போதைய வேட்பாளர் புகழேந்தி. அதனால் விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் நன்றிக்கடனை இந்த இடைத் தேர்தலில் காண்பித்து புகழேந்தியை வெற்றிபெற வைப்போம் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமாரும், சிந்தனைச்செல்வனும் பேசினார்கள்.

ஆனால், நாட்கள் ஆக ஆக அமைச்சர் சி.வி.சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து லோக்கல் விசிக நிர்வாகிகளிடம் பேசிவிட்டனர்.  ஒன்றரை வருஷம் எம்.எல்.ஏ.வா இருந்தாலும் பொன்முடியின் கைக்குள் தான் புகழேந்தி இருப்பார். அவரால திமுகவினருக்கே ஒண்ணும் செய்ய முடியாது. அதனால, உங்களுக்கு என்ன வேணும்னு இப்ப சொல்லுங்க. எல்லாமே செய்யுறோம் என்று சொல்லி சிறுத்தை நிர்வாகிகளை வளைத்திருக்கிறார்கள் அதிமுக தரப்பினர்.

இதன் காரணமாக திமுகவினரின் பிரசாரத்தில் இப்போது விசிக கொடிகளை அதிகம் காண முடியவில்லை. அதிமுகவினருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்த படி விசிக  நிர்வாகிகள் திமுகவுக்காக பிரசாரம் மேற்கொள்ளும்போது விசிக கொடிகளை எடுத்துச் செல்வதில்லை. கொடியோடு சென்றால், லோக்கல் அதிமுகவினரின் கண்ணில் பட்டால் டீல் பற்றி பேசி அசிங்கப்படுத்துவார்களோ என பயம் ஒருபக்கம். சில பகுதிகளில் அதிமுகவினரே, ‘திமுககாரங்களோட போங்க.ஆனா கட்சி கொடிகளை வேண்டாம் என ஆர்டர் போடும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறதாம்.

சிறுத்தைகள் திமுகவினருடன் தேர்தல் பணிகளுக்குச் சென்றாலும் கூட கட்சிக் கொடிகளை கழற்றி விடுகிறார்கள். எந்தெந்த பகுதிகளில் இதுபோல நடக்கிறது என்பது பற்றியெல்லாம் திமுக தலைவருக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு விட்டதாம். இதுகுறித்து திமுக தலைவர் விடுதலைச் சிறுத்தைகளோடு உடனே பேசிடனும், இல்லையென்றால் விசிகவின் உழைப்போ அல்லது உழைக்காமல் இருப்பதற்கான பலனோ அதிமுகவுக்கு வாக்காக மாறும் என்கிறார்கள் உபிக்கள்.