கொரோனாவால் மக்கள் வாழ்வா? சாவா? என்ற பீதியில் உறைந்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் புதிதாக விக் ஒன்றை வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இது பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.

 

பதற்றம் நிறைந்த இந்த நேரத்தில் மக்கள் மீது அக்கறை காட்டும் ஒரு தலைவர் செய்யும் வேலையா இது..? உடற்தோற்றத்துக்கும் இளமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நேரமா இது..? இக்கட்டான நேரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் செய்யும் காரியமா இது..? பேரிடர் காலத்திலும் ஊழல் செய்வதாக அதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின், பேரிடர் காலத்தில் புதிய ’விக்’மட்டும் வைத்துக்கொள்ளலாமா..? என விமர்சனங்களும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் ஆசிரியருமான மருது அழகுராஜ், ‘’கொரோனா அபாயத்தில் மக்கள் அவதியுற்று வரும் இத்தருணத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க அயராது பாடுபடுகிறது அரசு. எதிர்கட்சித் தலைவரோ தன் தலை முடி விகிதத்தை அதிகரிக்கும் அகங்கார அலங்காரத்தில்...’’கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் புதிய விக் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.