Asianet News TamilAsianet News Tamil

ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? ஓபிஎஸ் கருத்து இதுதான்... அதிமுக செய்தி தொடர்பாளர் விளக்கம்!!

அதிமுகவில் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்பது குறித்த ஓபிஎஸ் கருத்து பற்றி அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். 

admk spokesman explaned about ops opinion regarding admk leadership
Author
Chennai, First Published Jun 15, 2022, 11:17 PM IST

அதிமுகவில் ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்பது குறித்த ஓபிஎஸ் கருத்து பற்றி அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கிடையாது. அவர் கூறுவதை எல்லாம் பொருட்டாக மதிக்க கூடாது. ஒற்றை தலைமை என்று கருத்து சொல்லிவதற்கு ஜெயக்குமார் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் முன்னதாகவே உட்கட்சித் தேர்தல் நடைபெற்று ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டது.

தற்போது ஒரு சிலர் கட்சியை பிளவுபடுத்த வேண்டும் என்பதற்காக ஒற்றை தலைமை என்ற குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். ஒற்றை தலைமை என்று சொல்லி ஒரு சிலர் கட்சியை அழிக்கப்பார்க்கிரார்கள். ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முழுமையாக செயல்படுபவர். ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சியை வழிநடத்துவார். இயக்கத்தை காப்பாற்றுகிற பொறுப்பு ஓபிஎஸ்க்கு தான் உள்ளது. ஒற்றை தலைமை என்பதை அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை.

கட்சி தற்போது இருக்கும் நிலையில் நீடிக்க வேண்டும் என்பதே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து. அதிமுகவில் யாருடைய கையும் தனியாக ஓங்க தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். எந்தவித குழப்பத்திற்கும் கட்சியில் இடமில்லை. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கட்சியை இரட்டை தலைமையில் தான் சிறப்பாக வழி நடத்துவார்கள். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர்கள். அவர்களுக்கு ஒரு விருப்பம் இருக்கும், அவர்களது விருப்பத்தை அவர்கள் தெரிவிக்கிறார்கள் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios