ADMK special thalavai sundaram

டி.டி.வி தினகரனின் வலதுகரமான தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஆனார்…தளவாய் சுந்தரத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவு…

டி.டி.வி தினகரனின் வலதுகரமான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின்போது தென் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதய எம்எல்ஏ எஸ்.டி,கே.ஜக்கையன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பை வகித்து வந்தார்.

ஜக்கையன் எம்எல்ஏ ஆனதால் இது நாள் வரை அப்பொறுப்பு காலியாக இருந்தது.

நீண்ட நாட்களாக ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம், டி.டி.வி.தினகரனின் முயற்சியால் கடந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம் தோல்வி அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபின், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டார்.

தற்போது அதிமுக கட்வைசியே தற்போது தினகரன் வசம் வந்து விட்டது (சசிகலா அணி) அதே நேரத்தில் தற்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள தளவாய் சுந்தரத்தின் ஆலோசனைப்படி தினகரன் செயல் பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தினகரனின் தீவிர விசுவாசியான தளவாய் சுந்தரம்த் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதன் மூலம், அதிமுக எம்பிக்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் தளவாய் சுந்தரத்துக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.