தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமெனில் தற்போதைய ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக் கூட்டத் தொடர் மற்றும் முரசொலியின் பவளவிழா பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் வெளிநாடு செல்ல தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். 

ஆனால், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்தார். 

இந்நிலையில் ஏற்கனவே  திட்டமிட்டபடி மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கிருந்து லண்டன் செல்கிறார்.

விமானத்தில் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமெனில் தற்போதைய ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அவருடன் அவரது மருமகன் சபரீஷ் செல்கிறார். ஒரு வார காலம் வெளி நாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.