Asianet News TamilAsianet News Tamil

நாளை நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

admk protest scheduled tomorrow postponed due to montas cyclone says eps
Author
First Published Dec 8, 2022, 11:58 PM IST

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மின் கட்டண, பால் விலை உள்ளிட்ட உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9ம் தேதி) பேரூராட்சிகளிலும், 13 ஆம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14 ஆம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மணல் கொள்ளைக்கு எதிராக பாஜக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்... அறிவித்தார் அண்ணாமலை!!

இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் நாளை பேரூராட்சி அளவில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வரும் 16 ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ க.அன்பழகன்… அதிருப்தியில் அதிமுக!!

Follow Us:
Download App:
  • android
  • ios