அலைகடல் ஓய்வதுமில்லை.. அதிமுக சாய்வதுமில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் அறிக்கை விட்டுள்ளனர்.

சென்னை: அலைகடல்ஓய்வதுமில்லை.. அதிமுகசாய்வதுமில்லைஎன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் அறிக்கை விட்டுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: கழக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி வக்கிர நடவடிக்கைகள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை தேடி இருப்பது கண்டனத்துக்குரியது.

அதிமுக பொன்விழா கொண்டாடி வரும் வரும் இந்த எழுச்சிமிகு தருணத்தில் நேற்று சென்னையிலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் நடைபெற்ற உற்சாகமாக விழாக்களை கண்டு மனம் பொறுக்க முடியாத திமுக விடிந்தவுடன் காவல்துறையை ஏவிவிட்டு லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோர தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கிறது.

அதிமுக ஆழம் காண முடியாத அலைகடலுக்கு ஒப்பான பேரியக்கம், இந்த இயக்கம் திமுகவின் முயற்சிகளால் முடங்கிடவோ, முடியாமற்போகவோ, ஓய்ந்து சாயப்போவது இல்லை.

எத்தனை கழக நிர்வாகிகள் மீது என்னென்ன வழக்குகள் போட்டாலும் அவதூறு பரப்பினாலும் அதிமுக எதிர்காலத்தில் அடைய போகும் வெற்றிகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தெரிவித்து உள்ளனர்.

Scroll to load tweet…