விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் விருப்பமனு அளித்தவர்களிடம் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதியாகும். இதையடுத்து அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப் பதிவு. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் முக்கியமான கால கட்டத்தில் நடக்கும் இந்த இடைத்தேர்தல் களத்தில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதியாக விக்கிரவாண்டி தொகுதி இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் நின்று ரிஸ்க் எடுக்கவேண்டாம் என எண்ணிய அதிமுக தலைமை பாமகவிடம் கொடுத்துவிடலாம் அது எதிர்காலத்தில் கூட்டணி வைக்க ஈசியாக இருக்கும் என எண்ணியது.  ஆனால் அமைச்சர் சி.வி. சண்முகம் அதற்கு சம்மதிக்கவில்லை. 

விக்கிரவாண்டி தொகுதியில் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனை நிறுத்தியே ஆகணும் என நினைத்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தனது மகனுக்கு ஏற்பட்ட விபத்தை அடுத்து மகனுக்கான சிகிச்சைகளில் தீவிரமாக இருக்கும் ராதாகிருஷ்ணன், இந்த நிலைமையில் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டார். 

ஆனால், சி.வி.சண்முகமோ தனது அண்ணனை இடைத்தேர்தலில் நிற்கவைக்க தொகுதியில் உள்ள ஒவ்வொரு பூத்களுக்கும் பூத் செலவுக்கு காசு கொடுக்கப்பட்டதாம், அனால் தனது அண்ணன் இப்படி திடீரென தேர்தலில் நிற்க விருப்பம் இல்லை என சொல்வதால் வேறு ஒருவரை நிற்க வைக்க யோசித்து வருகிறாராம் சிவி.

அமைச்சர் சி.வி. சண்முகம் அண்ணன் திடீரென பின் வாங்கியதால் யாரை களமிறக்கலாம் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை அமைச்சர் சி.வி. சண்முகத்திடமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துவிட்டதால், தனக்கு விசுவாசமான ஒருவரை நிற்கவைக்க பிளான் போடுகிறாராம் சிவி.