இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எந்த வகையிலும் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை, திமுகவும் பெருசா பலம் பெற்றுவிடப்போவதில்லை, ஆனால், எடப்பாடியின் இமேஜைக் காப்பாற்ற மட்டுமே தொகுதிகளின் அதிமுகவுக்கு வெற்றி தேவைப்படுகிறது. இதனை செய்தால்தான் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ளவும் முடியும் என்பதால் எடப்பாடியம் இந்த வெற்றிக்காக மெனக்கெட உள்ளாராம்.

இதற்கு உதாரணம், தேமுதிகவின் பலம் என்ன என்பது கடந்த தேர்தல்களிலேயே தெரிந்துவிட்டது. மற்ற கட்சிகளைவிட நாங்கள்தான் பெரியவர்கள் என தெனாவட்டாக வளம் வரும் தேமுதிக. இடைத்தேர்தலுக்கு நூல்விட்டது ஆனால் அதற்க்கு முன்பாக வேட்பாளரை அறிவித்துவிட்டு அமைச்சர்களை விஜயகாந்த்தை சந்திக்க அனுப்பிவிட்டார் எடப்பாடி, காரணம்   ஓர் ஓட்டின் மதிப்புகூட பெரியதுதான். அப்படிப்பட்ட நிலையில் தேமுதிகவின் ஆதரவை இழக்க விரும்பாமல்தான் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுவிட்டு வந்துள்ளது.

நாங்குநேரியில் மொத்த 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்களும், விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 வாக்காளர்களும் இருக்கின்றனர். இந்த 2 தொகுதிகளிலுமே சராசரியாக தலா 1 லட்சம் வாக்குகளை டார்கெட் செய்துள்ளது அதிமுக. இதற்காக  ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் என மொத்தம் 30 கோடி பட்ஜெட் போட்டிருக்கிறதாம். இது ஒரு பக்கம் இருக்க கூட்டணி கட்சிகள், திமுகவின் அதிருப்தியாளர்கள், சாதி சங்கங்களுக்கென தனியாக 10 கோடி பட்ஜெட் போட்டு வைத்துவிட்டதாம்.

ஒவ்வொரு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 8 ஆயிரம் வாக்குகள் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறதாம், ஒவ்வொரு அமைச்சரின் கீழ் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட டீம் அமைக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பத்து பணப்பட்டுவாடா செய்வது வரை தனித்தனிடீம் என அதிமுக பயங்கர ஸ்கெட்ச் போட்டுள்ளதாம்.