எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதால், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால் முதல் நபராக ராஜினாமா செய்ய தயார் என்று அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். 

இந்த நிலையில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில்  அதிமுக எம்.பி. மைத்ரேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், மு.க.ஸ்டாலின் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மைத்ரேயன் எம்.பி., பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் அந்த நிர்பந்தம் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றால், தலைமை ஆணையிட்டால் முதல் நபராக ராஜினாமா செய்ய நான் தயார் என்று கூறினார்.

அதைப்போலவே அனைத்து எம்பிக்களும் தயாராக இருப்பார்கள். ஆனால் அது தீர்வாக அமையுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் மைத்தேயன் எம்.பி. கூறினார்.