காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது. அரசியல் தலைவர்கள், காஷ்மீர் நலனுக்காகவே காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, மத்திய அரசு சித்ரவதை செய்யவில்லை. நிலைமை சீரானதும் அவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கப்படும். பரூக், ஓமர் மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் விரைவில் விடுதலையாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். 

-    ராஜ்நாத் சிங் (மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்)

*    நம் அனைவருக்கும் ஒரேயொரு லட்சியம்தான் இருக்க வேண்டும். அது நம் காங்கிரஸ் கட்சியை புத்துயிர் பெற வைத்து, ஆதரவு தளத்தை தக்க வைத்து, அதிகாரத்திற்கு மீண்டும் வருவதையே நாம் குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் மிக கவனமாக பேச வேண்டும். நாம் செய்வதை திரித்துக் காட்டி, வகுப்புவாத மயமாக்க பா.ஜ.க. முயற்சிக்கும். 

-    ஜெய்ராம் ரமேஷ் (ராஜ்யசபா எம்.பி.)

*    நானும், பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வியும், பாகிஸ்தானில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. சமூகம், கலாசாரம் தொடர்பான விஷயங்களை மட்டுமே பேசினோம். அரசால் அங்கீகரிக்கப்படாத என்னைப் போன்ற ஒருவருடன், அரசியல் மற்றும் அரசியல் கொள்கைகள் குறித்து பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும். 

-    சத்ருஹன் சின்ஹா (மாஜி மத்தியுஅமைச்சர்)

*    இங்கிலாந்தில் அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகின்றனர். அவை, தமிழகத்தில் உள்ல தனியார் மருத்துவமனைகளை விட தரம் வாய்ந்தவையாக உள்ளன. பா.ம.க. ஆட்சியில் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் மூடிவிட வேண்டியதுதான். 

-    அன்புமணி ராமதாஸ் (பா.ம.க. இளைஞரணி தலைவர்)

*    தி.மு.க. ஆட்சியில்தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு எடுக்கப்பட்டது. அதில் புதிதாக சேர்க்கப்பட்ட தாய், தந்தை பிறப்பிடம் குறித்து, விளக்கம் கேட்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் இப்பிரச்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மக்களை திசை திருப்பி, குழப்பம் ஏற்படுத்துகிறார். 

-    ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

*    சென்னை அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தடுப்பு ஒத்திகையின்போது, பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள், முஸ்லிம்கள் போல தாடி வைக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. 

-    ஜவாஹிருல்லாஹ் (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்)

*    மத்தியரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு போன்றவை, முஸ்லிம்களுக்கு மட்டும் ஆபத்தானவை அல்ல. நாட்டின் அனைத்து மக்களுக்கும் எதிரானவை. நீங்கள் எத்தனை வகை ஆவணங்களை வைத்திருந்தாலும், இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும். 

-    திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)

*    காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். கட்சிப் பணிகளில் தீவிரமாக செயல்படக்கூடியவரை புதிய தலைவராக நியமிக்க வேண்டும். 

-    சசிதரூர் (காங்கிரஸ் எம்.பி.)

*    இருபது ஆண்டுகளுக்கு முன், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான வழி காட்டுதல்களை வெளியிட்டது முதல், ராணுவத்தில் பெண்களுக்கு சமமான அந்தஸ்து கிடைக்க, இம்மாதம் உத்தரவு பிறப்பித்தது வரை, உச்சநீதிமன்றம், முற்போகான சமூக மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. 

-    ராம்நாத் கோவிந்த் (குடியரசு தலைவர்)

*    ஜெயலலிதாவின் ஆட்சியைக் காட்டிலும், எடப்பாடியார் ஆட்சியில் முடிவுகள் வேகமாக எடுக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் தன் ஆளுமையையும், செயல் திறனையும் முதல்வர் இ.பி.எஸ். நிரூபித்துக் காட்டியுள்ளார். 

-    செம்மலை (அ.தி.மு.க. எம்.எல்.ஏ.)