மாணவி அனிதா தற்கொலை, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா, மிரட்டும் டி.டி.வி.தினகரன் முதரவு எம்எல்ஏக்கள் என தமிழக அரசுக்கு பெரும் சவால்களாக விளங்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய ஆளும் அதிமுக எல்எல்ஏக்களின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே வரும் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த அவசர அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்த கூட்டத்துக்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்புவிடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 எதிர்கட்சிகள் நம்பிக்கை வாக்கு நடத்தக்கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் அது குறித்துத் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.