அதிமுக பொது செயலாளர் சசிகலா தலைமையில், இன்று அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் ஒ.பி.எஸ். உள்பட 136 எம்எல்ஏக்களும் இதில் கலந்து கொண்டு, தங்களது தொகுதி பிரச்சனைகள், வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

மேலும், சட்டப்பேரவையில் அதிமுக தலைவராக சசிகலாவை ஒருமனதாக தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும், அதில் சசிகலாவை முதலமைச்சராக பொறுப்பேற்க வலியுறுத்தி, முன்மொழிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தொகுதியை சசிகலா தேர்ந்தெடுப்பார். அந்த தொகுதியில் அதிமுகவினர் செய்ய வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்க உள்ளதாக தெரிகிறது.