- Home
- Politics
- EPS vs Stalin: எடப்பாடிக்கு செக் மேட்.! எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
EPS vs Stalin: எடப்பாடிக்கு செக் மேட்.! எஸ்.பி.வேலுமணிக்கு ஆஃபர்களை அள்ளி வீசி ரகசிய டீல் போட்ட ஸ்டாலின்.! மொத்தமாக சரியும் கொங்கு கோட்டை?!
அதிமுகவின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் திமுகவில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆபரேஷன் கொங்கு மண்டலம்' என அழைக்கப்படும் இந்த நகர்வு அரசியல் ஆர்வலர்களுக்கு நல்ல தீனிதான் போங்க.!

ஆபரேஷன் கொங்கு மண்டலம்
தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவின் முக்கிய தலைவர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் திமுகவில் இணையக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தை சில ஊடகங்கள் "ஆபரேஷன் கொங்கு மண்டலம்" எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுகவில் செல்வாக்கான 2 தலைகள்
கோவை மற்றும் கொங்கு மண்டல அரசியலில் மிகுந்த செல்வாக்கு கொண்டவராக எஸ்.பி. வேலுமணி கருதப்படுகிறார். தொண்டாமுத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த அவர், அதிமுகவின் கொங்கு மண்டல முகமாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். அதேபோல், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கமணிக்கும் குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கட்டம் கட்டி தூக்கும் ஸ்டாலின்
அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின்படி, திமுக தரப்பில் இருந்து சில முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், எஸ்.பி. வேலுமணிக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புப் பொறுப்பும், தங்கமணிக்கு நாமக்கல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கிய பொறுப்பும் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
அடித்து விளையாட தொடங்கும் ஸ்டாலின்
இந்த முயற்சியின் பின்னணியில் கொங்கு மண்டல அரசியலின் முக்கியத்துவம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழ்நாட்டின் தொழில், ஏற்றுமதி மற்றும் விவசாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பகுதியில் வலுவான அரசியல் அடித்தளம் அமைப்பது எந்தக் கட்சிக்கும் மிகப் பெரிய பலமாகும். இதனால், வரும் 2026 சட்டமன்றத் இடைதேர்தல்களை முன்னிட்டு திமுக தனது ஆதரவுத் தளத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சிக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
கொஞ்சம் கூ இறங்கி வராத எடப்பாடி
மேலும், அதிமுகவில் சமீப காலமாக நிலவி வரும் உள் கருத்து வேறுபாடுகள் மற்றும் தலைமைப் போட்டிகள் குறித்த விவாதங்களும் இந்த ஊகங்களுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு கொண்ட சில தலைவர்களுக்கும் கட்சித் தலைமையுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன.
நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கடந்த காலங்களில் எஸ்.பி. வேலுமணியை கடுமையாக விமர்சித்த திமுக, தற்போது அவரை அணுக முயற்சிக்கிறது என்ற தகவலே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை என்பதற்கான மற்றொரு உதாரணமாக இதை சிலர் பார்க்கின்றனர்.
அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகும்
தற்போது இந்த தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் ஊகங்களாகவே உள்ளன. எஸ்.பி. வேலுமணி அல்லது தங்கமணி தரப்பில் இருந்து எந்தவிதமான உறுதிப்படுத்தலும் மறுப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த நகர்வு உண்மையாகி விட்டால், கொங்கு மண்டல அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகும் என்பது உறுதி.
கொஞ்சம் காத்திருந்தால் கத்திரிக்காய் சந்தைக்கு வரும்
வரவிருக்கும் நாட்களில் இந்த விவகாரம் எந்த திசையில் நகர்கிறது என்பதையே தமிழக அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வரும் இடை தேர்தல்களை முன்னிட்டு இது மிகப்பெரிய அரசியல் திருப்பமாக மாறுமா என்பது விரைவில் தெரியவரும்.

