ADMK Ministers against Income Tax Raid
ரத்தமும் சதையுமாக வாழ்ந்த குடும்பத்தில் உறவுகளுக்குள் சொத்து ரீதியாக கூட பிரிவினை வரலாம், பாசத்தை மறந்து வெறும் பணத்துக்காக முட்டிக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருக்கலாம். ஆனால் அந்த குடும்பத்தில் நிகழும் ஒரு நல்ல காரியமோ அல்லது சோக சம்பவமோ அவர்களை மீண்டும் இணைக்கும், இதே லாஜிக்கை தான் பிரிந்து கிடைக்கும் அதிமுக அணிகளிடம் எதிர்பார்க்கிறதா!? போயஸ் ரெய்டு.
வேத நிலையத்தில் ரெய்டு என்றவுடன் வெகுண்டு எழுந்திருக்கிறது தினகரனின் அணி. தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ரெய்டுக்குப்பின்ன்னே யார் இருந்தாலும் அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது, தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..?

போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்று பன்னீரையும் பழனிசாமியையும் விரல் நீட்டி சாபமிட்டுள்ளார்.

அதே நேரத்தில் எடப்பாடி மற்றும் பன்னீர் அணியிலிருந்து இரவு 11: 30 வரை எந்த ரியாக்ஷனும் இல்லாவிட்டாலும் சில அமைச்சர்கள் இந்த அணியின் தலைமையை நாம் " இப்போதும் வாய் மூடி அடிமை மௌனியாக இருந்தால் பத்து தலைமுறைக்கும் அந்த பாவம் தீராது, நாம் சாப்பிடும் ஓவ்வொரு அரிசியிலும் அம்மாவின் பெயர் இருக்கிறது. அந்த தெய்வத்தின் வீட்டில் இப்போது ரெய்டு, கேவலம் பதவிக்காக வாய் மூடி இருந்தால், நம் நிழல் கூட நம்மை மதிக்காது என்று புலம்பி கொட்டுகிறார்களாம்.
அமைச்சர்களின் இந்த மன மாற்றத்தை அதிர்ச்சியாக நோக்குகிறது அணி தலைமை, ஒருவேளை அவர்கள் மனம் கரைந்தால் ரெய்டுக்கு எதிராக வெளிப்படையாகவே பொங்கும் வாய்ப்புள்ளது. ஆக ரெய்டு எனும் நேர்கோட்டில் சசி அணியும் எடப்பாடி அணியும் இணையுமா? கவனிப்போம்.
