உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில்,  தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 19ம் தேதி  நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது .  நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் அதிமுக,  திமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில்  தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 19ம் தேதி என்று காலை 11 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது .  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்,  எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தொழில் துறைக்கான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது .  மேலும் உள்ளாட்சி தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியர்களின் நியமித்துள்ள நிலையில் அந்த மாவட்டங்களில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்நிலையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை இரவு சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.