எங்கும் அம்மா... எதிலும் அம்மா என  தாரக மந்திரமாக கொண்ட அதிமுகவினர். கட்சி ஆகட்டும் அல்லது அரசு வழங்கும் பொருள்கள் ஆகட்டும் அரசு அனைத்து நிவாரணப்பொருட்களிலும் முதல்வர் ஜெயலலிதாவின் படமின்றி கொடுக்கப்படாது. அப்படி அதை நினைவு படுத்தும் விதமாக  கேரளாவிற்கு  அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியுள்ளதை வைத்து நெட்டின்கள் கலாய்த்து தள்ளியுள்ளார்கள்.

கடந்த 2௦15 ஆம் ஆண்டு சென்னை மக்கள்  வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் உயிரைவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்  மலிவான விளம்பரம் தேடிய அதிமுகவினர், நிவாரண பொருட்கள் அனைத்திலும் அம்மா ஸ்டிக்கரை ஒட்டுவதாக புகார் எழுந்தது.  சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து  வந்தனர் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.  

பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய  பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு  மக்கள் திண்டாடி வந்த நேரத்தில் ஸ்டிக்கர்களை' தயார் செய்ய தாமதமானதால், அந்த உணவு பொருட்களை வழங்காமல் வைத்திருந்து ஸ்டிக்கர்கள் கிடைக்கப்பெற்ற பின் அதனை நிவாரண பொருட்கள் மீது ஒட்டி அரசு சார்பில் வழங்குவதாக கூறப்படுகிறது. 

இதற்காக பல ஆயிரக்கணக்கான ஸ்டிக்கர்களை தயார் செய்து வைத்துள்ளனர் அதிமுகவினர். தன்னார்வ நிறுவனங்களிடம் இருந்து பிடுங்கப்படும் உணவு பொருட்களில் முதல்வரின் படம் போட்ட 'ஸ்டிக்கர்களை உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது ஒட்டி வழங்கிய கூத்து அரங்கேறியது. 

அதுமட்டுமல்லாமல்  பொதுமக்களும், தன்னார்வத் தொண்டர்களும்  கொடுக்கும், உணவு பொருட்களையும்  ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வத் தொண்டர்களிடம் இருந்து உணவு பொருட்களை வாங்கி, நாங்கள்தான் விநியோகிப்போம் என பல பகுதிகளில் அராஜகத்தில்  ஈடுபட்ட  ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பினார்கள்.

அதோடு தான் விட்டார்களா?  வெளியூரில் இருந்து நிவாரணம் ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி நிவாரணப் பொருட்கள் மீது, ஆளும் கட்சி சின்னத்தை பதிப்பதும் பின்னர், அவர்களே எடுத்துச் சென்று நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய எடுத்து செல்வதாகவும் தாறுமாறாக ரகளை செய்தார்கள். அதிமுகவினர் செய்யும் இந்த செயலால் "ஸ்டிக்கர் பாய்ஸ்" என்ற ஹாஸ்டேக் டிரெண்டிங்ல் நம்பர் ஒன்னில் இருந்தது. இப்படி நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு இரையான அதிமுகவினர்  அவர்களின் இந்த ஆதரவால் உலக அளவில் பேமஸ் ஆனார்கள். 

இந்நிலையில்  2015 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டைப்போலவே கேரளாவும் மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவிலும் சிக்கித் தவிக்கின்றனர். உணவு உடை இருப்பிடமின்றி தவிக்கு அவர்களுக்கு உலகமெங்கிலும் இருந்து  நிவாரணம் மற்றும் உதவி உதவி குவிந்து வருகிறது. அதிமுக சார்பிலும்நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிமுகவினர் அனுப்பும் நிவாரணப் பொருட்களில் 2015 ஆம் ஆண்டு ஸ்டிக்கர் ஒட்டி உலக அளவில் பேமஸ் ஆனதைப்போவே தற்போதும், ஒட்டுமொத்த கேரளாவின் கவனத்தையும் திருப்ப அதிமுகவினர் பக்காவாக காய் நகர்த்தி வருகின்றனர். ஒரு வேல கேரளாவிலும் கட்சியை வளர்க்க பார்க்கிறாரோ எடப்பாடி என நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர்.