admk logo was blocked after 26 years

சசிகலா மற்றும் ஒ.பி.எஸ் தரப்பு வாதங்களை கேட்ட பிறகு இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிரபித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆர்.கே.நகர் இடைதேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனுதாக்கல் செய்யும் தேதி நிறைவடைகிறது.

இதனிடையே சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நாங்களே உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

இதைதொடர்ந்து இருதரப்பையும் இன்று நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சசிகலா தரப்பு மற்றும் ஒ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

பின்னர், விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தற்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தீர்ப்பு ஒ.பி.எஸ் தரப்பினருக்குக்ம் சசிகலா தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.