மத்திய அரசு ஆட்டுவிக்கும்படி தமிழகத்தை ஆளும் அரசு, ஆட்சி செய்கிறது. மத்திய அரசின் பிடியில் சிக்கியுள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இதுதொடர்பாக திருச்சியில், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, அவர்களிடம் கூறியதாவது.

திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தமிழகத்தில் முன்னோடியாக இருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகள் இரு கட்சிகள் மீதும் கூறப்பட்டு வந்தது. இதனால், மத்திய அரசில் உள்ள சிலர் பலவீனம் ஆகிவிட்டதாக நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் வெற்றிடத்தை பிடிப்பது என்பது வெறும் மாயை. அதை யாரும் ஏற்க முடியாது. அதை பெருமைப்படுத்தவும் முடியாது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறது.

மத்திய அரசு ஆட்சிவிக்கும்படி தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசின் பிடியில் சிக்கியுள்ளதால், வேறு வழியின்றி அவர்களின் பேச்சை கேட்டு அனைத்தும் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.