தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இன்னும் ஒரு மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவாஸ் கனி தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி, ராமநாதபுரம் தொகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன் என்று உறுதியளித்தார். மேலும்  பயிர்காப்பீடு கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ராஜ கண்ணப்பன், தமிழகத்தை வழிநடத்தும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இன்னும் ஒரு மாதத்திற்குள் கலைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என அவர் கூறினார்.

ஏற்கெனவே ‘’23ம் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி இருக்காது. மக்களின் மனநிலை அப்படித்தான் உள்ளது. செயல்படாத அரசாக அதிமுக அரசு உள்ளது. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நேர்மையான நிர்வாகம் நடத்த விரும்புகிறார்’’ எனத் தெரிவித்து இருந்தார்.