பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளது. கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
தமிழக அரசின் 2020 -2021 ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணி முதல் தாக்கல்செய்யப்பட்டு வருகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான பன்னீர் செல்வம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளது. கீழடியில் கிடைத்த பொருள்களை வைக்கும் அருங்காட்சியகத்துக்கு 12.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
2020-21 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 4,56,660 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் 2019- 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக பன்னீர் செல்வம் கூறியுள்ளார். திருந்திய நெல்சாகுபடி முறை சுமார் 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
உணவு மானியத்திற்கு தனியாக 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது தமிழக அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாய் எனவும் செலவும், 2,41,601 கோடி ரூபாய் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பற்றாக்குறை 22,226 கோடி ரூபாய் இருப்பதாகவும் பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 14, 2020, 11:42 AM IST