admk governing board meeting

மார்ச் 15 காலை 11 மணிக்கு அதிமுக ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், மார்ச் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அவைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 9 ஆம் தேதி அதிமுகவின் ஆட்சி மன்றக்குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி மன்ற குழு தலைவராக சசிகலா செயல்படுவார் எனவும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.

மேலும் இந்த குழுவில், செங்கோட்டையன், தினகரன், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் புதிய ஆட்சிமன்றக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மதுசூதனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன் எம்.பி, செம்மலை எம்.எல்.ஏ, பாண்டியராஜன் எம்.எல்.ஏ, மனோரஞ்சிதம் எம்.எல்.ஏ, மாணிக்கம் எம்.எல்.ஏ, நீலாங்கரை முனுசாமி, கோபாலகிருஷ்ணன் எம்.பி, மருதராஜ் எம்.பி, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, செங்குட்டுவன் எம்.பி, ஷேக் அயூப் ஆகியோர் இன்று முதல் ஆட்சி மன்ற குழுவாக செயல்படுவார்கள் என ஓ.பி.எஸ் அணி அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஆர்.கே நகரில் போட்டியிட உள்ள வேட்பாளரை புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆட்சிமன்றக் குழு கூடி தேர்வு செய்யும் என அறிவித்தார்.

இந்நிலையில், மார்ச் 15 காலை 11 மணிக்கு அதிமுக ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற உள்ளதாகவும், மார்ச் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அவைத்தலைவர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் எனவும் தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

இதில் சசிகலா தரப்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் யார் வேட்பாளராக நிற்க வைக்கபடுவார்கள் என தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.