Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவால் செயல்பட முடியாத நிலை !! புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வாருங்கள்…பரபரப்பு பொதுக்குழு அழைப்பு கடிதம் !!!

admk general body meeting wil be held on 12th august
admk general body meeting wil be held on 12th august
Author
First Published Sep 9, 2017, 7:54 AM IST


அதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா  தற்போது செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க 12 ஆம் தேதி கூடவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பொதுக்குழு கூட்டம் 12-ந் தேதி காலை 10.35 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற  உள்ளது.

admk general body meeting wil be held on 12th august

இந்த கூட்டத்தில், சுமார் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அவர்களுக்கான அழைப்பு கடிதம் கொரியர் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டத்திற்கு வரும்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கவருடன் கூடிய அழைப்பிதழை உடன் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

admk general body meeting wil be held on 12th august

எந்த முறையும் இல்லாத வகையில், இந்த முறை பொதுக்குழு உறுப்பினர்களை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழைப்பு கடிதம் கிடைத்துவிட்டதா?  கடிதத்துடன் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதம் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தில் ஜெயலலிதா  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்த நிலையில், 29 ஆம் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை வி.கே.சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

admk general body meeting wil be held on 12th august

தற்போது சசிகலாவால்  பொதுச் செயலாளராக செயல்படாநிலை ஏற்பட்டதால், எம்.ஜி.ஆரால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியின் சட்ட திட்ட விதி 20 (5)-ன்படி ஒன்று கூடி கட்சியை வழிநடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒருபகுதி எண்ணிக்கையினர், பொதுக்குழு கூட்டத்தை கட்சி சட்ட திட்ட விதி 19 (7)-ன்படி உடனடியாக கூட்டுமாறு தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இப்பொதுக்குழுவானது கூட்டப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

admk general body meeting wil be held on 12th august

கட்சியின் சட்ட திட்ட விதிப்படி  ஓராண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்ட வேண்டும் என விதி உள்ளதால் வரும் 12 ஆம் தேதி  காலை 10.35 மணிக்கு கூட்டப்படவுன்ன பொதுக்குழுக் கூட்டத்தில்  தவறாமல் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில், தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios