Asianet News TamilAsianet News Tamil

3 புயல்களை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி.. முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை - கொந்தளித்த ஆர்.பி உதயகுமார் !

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

admk former minister rb udhayakumar against cm mk stalin
Author
First Published Nov 8, 2022, 9:53 PM IST

அப்போது பேசிய அவர், மதுரை மாநகராட்சி  மற்றும் மதுரை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனம் அலட்சியத்தாலும் பலியாகும் அப்பாவி தொழிளார்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போய் உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்:

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பழங்காநத்தம் தொடங்கி தற்போது கூடல்புதூர் வரை 6 பேர் பலியாகி உள்ளனர். கூடல்புதூர் பாதாள சாக்கடை குழி தோண்டும் பொழுது 10அடி பள்ளத்தில் சக்தி என்பவர் பலியாகி உள்ளார். இவரை   5 நேரம் போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்டுக்கப்பட்டுள்ளது. அவரை நம்பி அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

மதுரையில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைக்காக தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பருவமழை காலத்தில் இதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைத்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார். பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால், இதுபோன்ற பலிகள் தொடர்கிறது.

admk former minister rb udhayakumar against cm mk stalin

இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?

மதுரை மாநகராட்சி:

மதுரை மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. மதுரை மாநகராட்சி அலட்சிய போக்கால் தொழிலாளர்கள் உயிர்பலி தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது. மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 173 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதற்கெல்லாம் உரிய நிவாரணங்களை கணக்கெடுத்து அரசு நிவாரண உதவிதொகை வழங்க வேண்டும். அதேபோல் தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை இதுவரை 26 பேர் இறந்ததாக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இதுவரை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அவர்கள் குடுபத்திற்கு 4 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை. அதையும் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வடகிழக்கு பருவ மழையால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் சேதம் அடைந்துள்ளது. அதை கணக்கெடுத்து  நிவாரணம் மற்றும் இடுபொருள் நிவாரணம் பேரிடர்நிவாரணநிதியில் இருந்து வழங்க வேண்டும்.

தமிழக அரசு:

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் தரிசிக்க வருகை தருகின்றனர். குறிப்பாக கிழசித்திரை வீதியில் சாக்கடை நீர் தேங்கிக் இருக்கிறது. பொதுமக்கள் நிம்மதியாக சாமி கும்பிட கோவிலுக்கு வரும் பொழுது, , இதுபோன்று துர்நாற்றம் மக்களுக்கு வேதனை அளிக்கிறது. மழை நீரில் சாக்கடை கலந்து வருகிறது இதையெல்லாம் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வடகிழக்கு பருவமழையில் நமக்கு 48 சதவீதம் தண்ணீர் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க..10% இட ஒதுக்கீடு.! உயர்ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு தேவையா ? சர்ச்சைகளுக்கு காரணம் என்ன ?

தமிழகத்தில் மழை:

தற்போது உள்ள வடகிழக்கு பருவ நிலையில் 75% நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற  எடப்பாடியார் காலகட்டத்தில் குடிமராமத் திட்டத்தின் கீழ் ஏரி, கண்மாய், குளங்கள் எல்லாம் தூர்வாரப்பட்டு அதன் மூலம் நீர் சேமிக்கப்பட்டது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் கூட தற்பொழுது நெல்லை  தென்காசி போன்ற மாவட்டங்களில் உள்ள 432 ஏரிகள் நீர்இல்லாமல் வறண்டு போய் உள்ளது.

admk former minister rb udhayakumar against cm mk stalin

இந்த அரசு நீர் மேலாண்மையில் முறையாக கையாளுவது இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வடகிழக்கு பருவமழை உயிர்இழப்புகளை தடுத்திட உரிய முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பலியாகி உள்ளார். அவருக்கு பேரிடர் நிதியில் இருந்து முழுமையாக நிதியை வழங்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி: 

ஆனால் அரசுக்கு தர மனம் வரவில்லை. சென்னையில் நடைபெறும் கள நிலவரங்களை அமைச்சர்கள் தயக்கமில்லாமல் மக்களிடத்தில் எடுத்துச்சென்று, விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனால் மழை வடிகால் பணிகளை   30 சதவீத பணிகளை முடித்துவிட்டு, 90% பணிகளை முடித்ததாக ரெடிமேட் பதிலை கூறுகிறார்கள். எடப்பாடியார் கஜா புயல், ஒக்கி புயல், வர்தா புயல் போன்ற புயல் காலகட்டத்தில் பல்வேறு அனுபவங்களை பெற்றார் குறிப்பாக கொட்டும் மழையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களின் நம்பிக்கை பெற்றார்.

முதல்வர் ஸ்டாலின்:

மேலும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேரடியாக சென்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தான் இன்றைக்கு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் செய்கிறார். ஆனால் தீர்வு காணப்படவில்லை உயிர்ப்பலி தொடர்கிறது ஆகவே வடகிழக்கு பருவ மலையை உயிர்பலி இல்லாத வகையில் எதிர்கொண்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க..பள்ளி மாணவியுடன் காதல்.! மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியர் - ஆச்சர்ய சம்பவம்!

Follow Us:
Download App:
  • android
  • ios