பள்ளி மாணவியுடன் காதல்.! மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய ஆசிரியர் - ஆச்சர்ய சம்பவம்!
மாணவியை ஒருவரை திருமணம் செய்ய பெண்ணிலிருந்து ஆணாக ஆசிரியர் மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர்தான், பாலின மாற்று அறுவை சிகிச்சை அவரது மாணவி கல்பனாவை தற்போது திருமணம் செய்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருமணம் செய்துகொள்ளும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இதற்கு அவர்களின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு உடன் நடந்துள்ளது. மீரா தனது பெயரை பின்பு, ஆரவ் குந்தல் என மாற்றியுள்ளார். பள்ளியில் உடற்கல்வி வகுப்புகளின் போது கல்பனாவை மீரா சந்தித்துள்ளார்.
அப்போது தான் அவர்களிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.நான் அவரை ஆரம்பத்திலிருந்தே விரும்பினேன். அவர் இந்த அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும், நான் அவரை திருமணம் செய்திருப்பேன். அறுவை சிகிச்சைக்கு அவருடன் சென்றேன்’ என்று கல்பனா கூறினார்.
இதையும் படிங்க.பாலிகிராப் சோதனை! ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?
அவர்களது திருமணம், இந்தியாவில் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், இன்னும் அரிதாக இருந்தாலும், அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க.முடி கொட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்த இளைஞர்.. மருத்துவர் தான் காரணம் - அதிர்ச்சி தகவல்!