Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர் நீக்கம் - போலி அறிக்கை வெளியிட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி அதிரடி கைது

முன்னாள் கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக போலி அறிக்கை வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Admk Ex Minister Udumalai Radhakrishanan
Author
Tamil Nadu, First Published Dec 2, 2021, 9:54 PM IST

நேற்று முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் கையொப்பிட்ட அறிக்கை ஒன்று சமுக வலைதளங்களில் பரவியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பிரச்சனை வெடித்த நிலையில் , கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர், மூத்த தலைவருமான அன்வர் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார்.குறிப்பாக அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் முந்தைய நாளில் இந்த அறிவிப்பு அதிமுக சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

பின்னர் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய சிறப்பு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. அதிமுகவின் விதிகளில் சில பிரிவுகள் மாற்றமைக்கபட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், அதிமுக தற்காலிக அவைதலைவராக அதிமுக மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன் ஒருமனதாக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கால்நடை துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல் பட்டதன் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கட்சி கடிதத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களரின் கையொப்பமிட்ட தாக போலியான கடிதம் வலைதளங்களில் வைரலானது. இதுக்குறித்து கட்சியின் மேலிடத்தில் கூறும் பொழுது, அறிக்கை போலியானது என்றும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சில விஷமிகள் இதுபோன்று போலி அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் அதிமுக சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அதிமுக நிர்வாகி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிக்கை கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அமைச்சர், உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பிலும் காவல்துறை தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து குற்றப்பிரிவு 153, 499, 463, 505 , தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டம் 66A அடிப்படையிலும் நடவடிக்கை எடுத்து உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் , பொள்ளாச்சியை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர் தான் பொய்யான வதந்திகளை சட்டத்திற்கு விரோதமாக போலியாக தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் என்றும் , அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டது. 

இந்த புகார் அடிப்படையில் பொள்ளாச்சி கோமங்கலத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகியான அருண் பிரசாத் மீது மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios