இந்த பட்டியலில் ஏற்கனவே சீனியர் அமைச்சர்கள் 3 பேருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடவில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ... 

அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் போடி தொகுதியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 171 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த பட்டியலில் ஏற்கனவே சீனியர் அமைச்சர்கள் 3 பேருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடவில்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ... 

  • திருத்தணி எம்எல்ஏவாக உள்ள நரசிம்மனுக்கு மறுபடியும் சீட் வழங்கப்படவில்லை
  • ஊத்தங்கரை எம்எல்ஏவாக உள்ள மனோரஞ்சிதம் மறுபடியும் போட்டியில்லை
  • பர்கூர் எம்எல்ஏவாக உள்ள ராஜேந்திரனுக்கு மறுபடியும் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை
  • கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருக்கும் பிரபு பெயர் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இல்லை
  • கங்கவல்லி எம்எல்ஏவாக உள்ள மருதமுத்துவுக்கு மறுபடியும் வாய்ப்பு இல்லை
  • ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பிக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை
  • ஓமலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேலுக்கும் அதிமுக மறுபடியும் வாய்ப்பு கொடுக்கவில்லை
  • மேட்டூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் செம்மலை தேர்தலில் போட்டி இல்லை
  • சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜாவின் பெயர் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இல்லை
  • சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் மறுபடியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை

இதுபோதாது என்று அதிமுக எம்பி கே.பி.முனுசாமிக்கு வேப்பனஹள்ளி தொகுதியிலும், எம்பி வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.