சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக விலகல் குறித்தும், பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்ட நிலையில் மற்ற சிறு கட்சிகள் போட்டியிடும் விவரங்கள் அதிமுகவில் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே முதல் கட்டமாக 6 வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக அறிவித்துள்ளது. மார்ச் 12 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், எஞ்சிய வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட அதிமுக முடிவாகியுள்ளது.

முதலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அதிமுக வேட்பாளர்களுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் நேற்றிரவு 9.15 மணி அளவில் பாஜக தலைவர் எல்.முருகன், கிஷன் ரெட்டி, பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். 

சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக விலகல் குறித்தும், பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் இன்று அதிமுக - பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் எவை என அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.