*    அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பேச, தே.மு.தி.க.வினருக்கு அக்கட்சியின் தலைவரான விஜயகாந்தின் மனைவியும்,  கட்சியின் பொருளாளருமான பிரேமலதா தடை விதித்துள்ளார். 
-    பத்திரிக்கை தகவ

*    ஸ்டாலின் ஒரு நிமிடம் பொறுங்கள். சட்டசபையில் உரையாற்ற நான் வந்துள்ளேன். நீங்கள் சிறந்த பேச்சாளர். இரண்டு ஆண்டுகளாக உங்களை கவனித்து வந்துள்ளேன். என் பேச்சை இடைமறிக்காமல், விவாதத்தின் போது அதிக நேரம் நீங்கள் பேசுங்கள். 
-    பன்வாரிலால் புரோஹித் (தமிழக கவர்னர்)

*    தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்! என தமிழக கவர்னர் சட்டசபையில் பேசியுள்ளார். அது போல, 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்ற உறுதியையும் அவர் வழங்கியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. 
-    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

*    சீமானின் எல்லா பேச்சுக்களையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் வாழ்வுரிமைக்காக அவர் பேசக்கூடியவற்றை நான் ஆதரிக்கிறேன். அதே சமயத்தில் அவரது தரம் தாழ்ந்த பேச்சுக்களில் எனக்கு உடன்பாடில்லை. அவரது முகம் சுளிக்க வைக்கும் பேச்சுக்களை நான் ஏற்றுக் கொள்வதும் இல்லை. 
-    வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்)

*    உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி எங்கள் உற்சாகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. தே.மு.தி.க. இன்னும் பிடிப்புடன் இருக்கிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. எங்கள் தலைவர் விஜயகாந்தால்தான் இந்த வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. பிரசாரத்துக்கு அவர் வரமுடியாவிட்டாலும், மக்கள் அவர் கட்சியை வெல்ல வைத்துள்ளனர். 
-    மோகன் ராஜ் (தே.மு.தி.க. கொ.ப.செ.)

*    குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பரப்பப்படும் பொய் பிரசாரத்தினால் ஈர்க்கப்பட்டு, சிலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கத்தான் இந்த சட்டமே தவிர, பறிப்பதற்கு அல்ல. கயவர்களின் தவறான பிரசாரங்களுக்கு மாணவர்களும், இளைஞர்களும் இரையாக கூடாது. 
-    முக்தர் அப்பாஸ் நக்வி (மத்தியமைச்சர்)

*    யாருடைய கருணையிலும் நாம் வாழவில்லை. நம்முடைய உரிமைகளை பறிக்க நான் யாரையும் அனுமதிக்க மாட்டேன். தேசிய குடியுரிமை மதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடரும். உங்கள் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன். அதை அவர்கள் பறிக்க வேண்டுமானால், அது என் பிணத்தின் மீதுதான் நடக்கும். 
-    மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

*    தமிழகத்தின் கடன் அளவு அதிகரித்து வருவது பற்றியோ, வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருவது பற்றியோ, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கிறோம் என்பது பற்றியோ தமிழக அரசு எதுவும் கூறவில்லை. இது குறித்து கவர்னர் உரையில் எந்த தகவலும் இல்லை. 
-    இரா.முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

*    கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளாக காங்கிரஸை நம்பி, வாக்களித்து வந்த முஸ்லிம் மக்களுக்கு அக்கட்சி ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ளது. அதனால்தான் காங்கிரஸை எதிர்க்கிறேன். பா.ஜ.க.வை ஆதரிக்கிறேன். 
-    வேலூர் இப்ராஹிம் (ஏகத்துவ பிரசார ஜமாத் தலைவர்)

*    எங்கள் கட்சியுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை ஒப்பிடுவதே தவறு. எங்கள் கட்சியின் போட்டியானது தி.மு.க.வுடன் மட்டும்தான். சுயேட்சைகளே ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருக்கும்போது, அ.ம.மு.க. மோசமாகத்தான் வீழ்ந்திருக்கிறது. அ.ம.மு.க.விலிருந்து எங்கள் கட்சிக்கும் நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எல்லோரும் வந்துவிட்டார்கள். பிறகு எதற்கு இணைப்பு?
-    பொன்னையன் (அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்)