Asianet News TamilAsianet News Tamil

பிளஸ் டூ மார்க் மூலமே அட்மிஷன் நடக்கணும்.. நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக ஒத்துழைக்கும்..ஓபிஎஸ் அதிரடி..!

இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பு சேர்க்கை நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 

Admission will be done through Plus Two Mark .. AIADMK will cooperate to cancel NEET exam .. OPS Action ..!
Author
Chennai, First Published Jun 30, 2021, 9:11 PM IST

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தொடர்ந்து அறிக்கை வெளியியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த ஆண்டிலேயே மருத்துவப் படிப்பில் சேர்க்கை நடைபெற ஆவன செய்ய வேண்டும்.Admission will be done through Plus Two Mark .. AIADMK will cooperate to cancel NEET exam .. OPS Action ..!
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பு உட்பட அனைத்து படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. மேலும், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட மசோதாவை வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து என்பதற்கு அதிமுக தனது முழு ஒத்துழைப்பை நல்கும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். 

Follow Us:
Download App:
  • android
  • ios