Asianet News TamilAsianet News Tamil

புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை. மா.சு அதிரடி சரவெடி.

அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அம்மா உப்பு அம்மா கூட்டுறவு வங்கி உள்ளிட்ட திட்டங்கள் பெயரளவில் உள்ளன தற்போது எந்த திட்டமும் செயல்பாட்டில் இல்லை என தெரிவித்தார். 

Admission of students in 11 newly constructed medical colleges. Ma.Su Action Saravedi.
Author
Chennai, First Published Sep 28, 2021, 11:20 AM IST

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

மக்களை தேடி மருத்துவம் மூலம் தினமும் 50,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 110அறிவிப்புகளில் ஒன்றான, கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் நாளை சேலத்தில் தொடக்கி வைக்க இருக்கிறார். பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது,மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16சிறப்பு துறை மருத்துவருடன் கூடிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் ஆண்டுக்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

Admission of students in 11 newly constructed medical colleges. Ma.Su Action Saravedi.

11 மருத்துவமனைகளிலும் மாணவர் சேர்க்கையை தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் கட்டட பணிகளை சரிவர முடியவில்லை என்றும் அதனை மீண்டும் மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இன்னும் 10நாட்களில் அந்த கட்டட பணிகள் முடிந்துவிடும். இந்த நான்கு கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவமனைகளில் தலா 150 வீதம் 450 மாணவர்கள் சேர்க்கைக்கும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 100மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Admission of students in 11 newly constructed medical colleges. Ma.Su Action Saravedi.

வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலம், அம்மா மினி கிளினிக் செயல்பட எவ்வித பாதிப்பும் இல்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அம்மா உப்பு அம்மா கூட்டுறவு வங்கி உள்ளிட்ட திட்டங்கள் பெயரளவில் உள்ளன தற்போது எந்த திட்டமும் செயல்பாட்டில் இல்லை என தெரிவித்தார். மேலும், இந்த வாரம்(அக்டோபர் 2, ஞாயிறு) 12,500 கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், மெகா தடுப்பூசி திட்டம் இல்லை. அடுத்த வாரம் ஞாயிறு அன்று மிகப்பெரிய அளவில் முகாம் அமைக்கப்படும் என்றார். கொரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios