பிரபல நடிகை வினோதினி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இன்று இணைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விசு இயக்கத்தில், எஸ்.வி.சேகர் நடித்த, மணல் கயிறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், 'வினோதினி'. இதை தொடர்ந்து, புதிய சகாப்தம், மண்ணுக்குள் வைரம், போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.

மேலும், 'வண்ண வண்ண பூக்கள்' என்கிற படத்தின் மூலம், நடிகர் பிரசாத்துக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடந்து தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இவர் பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக வெற்றி பெற முடியவில்லை. 

இதனால், குணச்சித்திர வேடம் மற்றும் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், வினோதினி இது வரை 40 திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் 15 திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின், கணவர் குழந்தைகள் என சென்னையில் வசித்து வந்த வினோதினி, தற்போது அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரனை சந்தித்து அந்த கட்சியில் இணைந்துள்ளார். இவருடன் நடிகர் ரஞ்சித்தும் அப்போது இருந்தார். இதனை உறுதி செய்யும் விதமாக தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.