அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த விந்தியா தற்போது கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர். 

 

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் நடிகை விந்தியாவின் பெயரையும் சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டிருந்தார். உடனடியாக சூறாவளி பிரச்சாரத்தில் குதித்த விந்தியா, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும், எதிர்க்கட்சியினரை விமர்சித்தும் செய்த பிரச்சாரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. 

 

 

தனது பேச்சுத்திறமையால் எதிர்க்கட்சிகளை திணறடித்ததால் தான் நட்சத்திர பேச்சாளரான விந்தியாவை, கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அதிமுக தலைமை நியமித்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் அவர்களது இல்லத்தில் சந்தித்த விந்தியா, மலர்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். 

 

 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டிக் கொடுக்க வந்த தயாரிப்பாளர்... தெருக்கோடி வரை விரட்டி விட்ட சாய் பல்லவி...!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விந்தியா, தனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரும், துணை முதல்வரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை நம்பிக்கையுடன் காப்பாற்றுவேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.