பீகாரில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பதில் பாஜக-ஜேடியூ கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி 123 தொகுதிகளில் முன்னிலை/வெற்றி பெற்றுள்ளது. ஆர்.ஜே.டி. -காங்கிரஸ் கூட்டணி 113 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதேபோல மத்தியப்பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
மேலும் குஜராத், மணிப்பூர், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பாஜக அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் பாஜக வெற்றி குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “அடிக்கடி கை கழுவுங்கள். இது corona சொல்லிய பாடம். நிரந்தரமாய் கையை கழுவுங்கள். இது மோடி ஜி பீகாரில் உணர்த்திய பாடம். வரும் தேர்தலில் தமிழகம் இதை எதிரொலிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.