Asianet News Tamil

பொய்வழக்கில் தமிழரை காப்பாற்றிய நடிகை ரோஜா.! உடனடி ஸ்டெப் எடுத்த தமிழர் ஆர்.கே செல்வமணிக்கு குவியும் பாராட்டு

இரண்டுமுறையும் பிணை மறுக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.  அந்த அப்பாவி ஓட்டுநர் விடுதலையாகி தற்போது தனது தாய் மண்ணான தமிழகத்தில் மீண்டும் தன் கால்களைப் பதித்திருக்கிறார்

actress and mla roja rescued face case Tamil prisoner from Andhra jail , greeting for rk selvamani
Author
Chennai, First Published Mar 20, 2020, 2:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஆந்திர மாநிலச் சிறையில் அடைப்பட்ட அப்பாவி தமிழரை மீட்க உதவிய அந்திர மாநில சட்டமன்ற உறுப்பினரும், அம்மாநில தொழிற்துறை உள்கட்டுமான வாரியத்தின் சேர்மனாகவும் உள்ள நடிகை ரோஜாவை எழுத்தாளர் பாமரன் உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.  சிறைபட்ட அப்பாவி ஏழைத் தமிழருக்கு ரோஜா உதவியது குறித்து பாமரன் வெளியிட்டுள்ள கட்டுரை :-  

இருவாரங்கள் முன்பு அலறியது அலைபேசி... யாரென்று பார்த்தால் ஊடகத்துறையில் பணியாற்றும் தம்பி ஒருவரின் அழைப்புதான் அது... அண்ணே கோவையைச் சேர்ந்த ஒரு அப்பாவி லாரி ஓட்டுநரை ஆந்திரா போலீஸ் தூக்கீட்டுப் போய் சித்ரவதை செய்யறாங்கண்ண.  என்ன சொல்லியும் கேட்காம அரிசி கடத்துனார்ன்னு சொல்லி பொய் வழக்குப் போட்டு ஆந்திரா ஜெயில்ல உள்ளே தள்ளீட்டாங்க. பெயிலுக்குப் போராடிப் பார்த்தும் பிணை கிடக்கலண்ணே….நீங்க நம்ம சத்யராஜ் தோழர் கிட்ட சொல்லி எப்படியாவது அவரை மீட்க வழி பண்ணுங்க என்றார். தவறுதலாக பொய் வழக்கில் கோர்க்கப்பட்ட ஓட்டுநர் ரவிச்சந்திரன் குறித்தும் அவரது மனைவி வாணீஸ்வரி கதறலோடு அளித்த பேட்டியையும் எனக்கு உடனடியாக அனுப்பி வைத்தார் அந்த ஊடகவியலாளர்.


.
இது குறித்து இணையதள பத்திரிக்கை ஓன்றில்  முழுமையான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதே தகவலை தோழர் சத்யராஜுக்கும் அனுப்பி “நான் பாமரன் அண்ணனின் தம்பிகளில் ஒருவன். இது குறித்து ஆந்திராவிலுள்ள நடிகை ரோஜா மேடத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவரை மீட்க உதவுங்கள்” என்று செய்தி அனுப்ப.  அடுத்த சில நிமிடங்களில் தொடர்பு கொண்ட தோழர் சத்யராஜ் ”இதன் நம்பகத்தன்மையை கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள் தோழர்…
நாம் மேற்கொண்டு வேலைகளைப் பார்ப்போம்” என்று கூறினார். 


.
மறுநிமிடமே… நெருங்கிய ஊடக நண்பர்களிடம் விசாரித்தேன்… ”அறச்சீற்றம் கொண்ட ஊடகவியலாளன் அவர் என்பதால் விசாரித்த அளவில் அந்த ஓட்டுநர் எந்தத் தவறும் செய்யவில்லை” என்றும் தோழர் சத்யராஜுக்கு தகவலைச் சொன்னேன். அடுத்து நடந்ததெல்லாம் விறு விறுப்பின் உச்சம். உடனடியாக சத்யராஜ் அவர்கள் இயக்குநரும் நடிகை ரோஜாவின் இணையருமான ஆர்.கே. செல்வமணியுடன் இத்தகவலைச் சொல்ல….அடுத்த சில நிமிடங்களில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனின் காதல் மனைவி வாணீஸ்வரியிடம் விசாரித்துவிட்டு தனது இணையரும் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் தொழிற்துறை உள்கட்டுமான வாரியத்தின் சேர்மனாகவும் இருக்கிற நடிகை ரோஜாவிடம் சகல செய்திகளையும் தெரிவித்தார்.  விளைவு ?: 

தனது கவனத்துக்கு இந்தத் தகவல் வந்ததும் துரித நடவடிக்கையில் இறங்குகிறார் நடிகை ரோஜா . சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவினது உத்தரவின் பேரில் அவரது உதவியாளர் இது சம்பந்தப்பட்ட சகலரிடமும் ஆந்திர போலீஸ் தவறுதலாக கைது செய்துவிட்ட சம்பவத்தை எடுத்துக் கூறி பிணையில் வெளிவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதன் விளைவாக  ஒன்றரை மாதமாக ஆந்திரா சிறையில் சித்ரவதை அனுபவித்த… இரண்டுமுறையும் பிணை மறுக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன் நேற்று முன் தினம் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.  அந்த அப்பாவி ஓட்டுநர் விடுதலையாகி தற்போது தனது தாய் மண்ணான தமிழகத்தில் மீண்டும் தன் கால்களைப் பதித்திருக்கிறார்

இப்படி சகலரது முயற்சியின் விளைவாக அவர் விடுதலை ஆகியிருந்தாலும்.... தாமதிக்காது இதனை உடனே அவர்களது கவனத்துக்குக் கொண்டு சென்ற சத்யராஜ் தோழரும் அவரது தகவல் கிடைத்த மறுநிமிடமே தோழியர் ரோஜா அவர்களிடம் எடுத்துக்கூறிய எமது அன்பிற்குரிய நண்பர் ஆர்.கே. செல்வமணி அவர்களும்…தனது எண்ணற்ற பணிகளுக்கு இடையேயும் அந்த அப்பாவி ஓட்டுநரின் அவலம் தீர்க்க மின்னலெனப் செயல்பட்டு சிறையில் இருந்து விடுவிக்க பேருதவி புரிந்த மரியாதைக்குரிய ரோஜா அவர்களும் என்றென்றும் எமது நன்றிக்குரியவர்கள். தொடரட்டும் உங்கள் மனித நேயப் பணிகள் என எழுத்தாளர் பாமரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  

இந்த தகவலையடுத்து சமூக வலைதளத்தில் ரோஜாவையும், அவரது கணவரும் இயக்குனருமான  ஆர் கே. செல்வமணிக்கும்  பராட்டுக்கள் குவிந்து வருகிறது...  ஆந்திரா மாநிலமாக இருத்தாலும் சரி,   தெலுங்கானாவாக இருந்தாலும் சரி,   தமிழருக்கு  ஒரு இன்னல் என்றால் தாமதியாமல்  உதவிக்கரம் நீட்டும் தமிழிசைசௌந்திர ராஜன் மற்றும் ரோஜா செல்வமணி போன்றோரின் தமிழ்பாசம் என்றும்  பாராட்டுக்குறியதே... சபாஸ் ரோஜா தொடரட்டும் உங்கள் மக்கள் பணி...
 

Follow Us:
Download App:
  • android
  • ios