தலைவா என்கிற டைட்டில் வைத்த படத்தில் ஹீரோவாக  நடித்தார். அந்த படத்தில் விஜய் அரசியல் பேசுவதும், டைம் டூ லீட் என்கிற சப் டைட்டிலுடன் படம் வெளியாக இருப்பதும் அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

இதுபோதாதா தலைவா திரைப்படத்தின் ரிலீஸுக்கு ஆபத்து வர. ஆளும் அரசாங்கத்தை எதிர்த்துக்கொண்டு தலைவா படத்தை வாங்க எந்தச் சேனலும் முன்வராத நிலையில் சன் டி.வி. வாங்கியது. இது இன்னும் இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தியது. தலைவா படத்தை திரையிட்டால் தியேட்டர்களை தாக்குவோம் என மிரட்டல் வந்ததால் எந்தத் தியேட்டரிலும் படம் ரிலீஸாகாது என்று சொல்லிவிட்டனர். இந்த நிலையில், விஜய்யும், தலைவா தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கொடநாடு வரை சென்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் திரும்பி வந்தார்கள்.

அதன் பிறகு சென்னை திரும்பி ஜெயலலிதாவுக்கு உருக்கமான ஒரு வீடியோ வெளியிட்டு பிரச்சனையை முடித்தார் விஜய்.  சென்னை திரும்பிவந்த விஜய், ஜெயலலிதாவின் ஆட்சியில் செய்தவையென சில திட்டங்களைச் சொல்லி, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள் என ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். அதன்பிறகுதான் ஒரு வழியாக தலைவா ரிலீஸானது. 

 

இப்படி பதுங்கி பயந்த விஜய் இப்போது ஜெயலலிதா மறைந்த பிறகு அரசியல் வீரரைப்போல பேசி வருவதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர்.