நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன் நட்சத்திர ஹோட்டலில் முரசொலி செல்வம் இல்ல நிகழ்ச்சியில் நடிகர் விஜயும் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மு.க.ஸ்டாலின் விஜயை சந்தித்து கைகுலுக்கி பேசினார். இந்தப்புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது. 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், ’முதல்வர், அமைச்சர்கள் ரகசியமாக வெளிநாடு செல்லவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட தவிடுபொடியாகி விட்டது. நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அமெரிக்கா, ரஷ்யா அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால், அதை கண்டிப்பாக ஏற்கமாட்டோம். பாதிப்பு எதுவும் வராதபட்சத்தில் அத்திட்டத்தை ஏற்போம்’’ எனத் தெரிவித்தார்.