நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் தொடர்பான பணிகளை இதுநாள் வரை கவனித்து வந்த எஸ்ஏசி மகன் விஜய் மட்டும் அல்லாமல் மனைவி ஷோபாவாலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

தந்தை எஸ்ஏசிக்கு எதிராக மகன் விஜய் வெளியிட்ட அறிக்கை அவரது ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனென்றால் நடிகர் விஜயை முன்னணி நடிகராக மாற்றியதோடு மட்டும் அல்லாமல் அவரை மாஸ் ஹீரோவாக்கியதில் தந்தை எஸ்ஏசிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதோடு மட்டும் அல்லாமல் விஜயின் ரசிகர் மன்றங்களை திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு இணையான ஒரு இயக்கமாக நடத்தி வந்ததிலும் எஸ்ஏசியின் வியூகம் இருக்கிறது.

மேலும் நடிகர் விஜயின் திரைப்படங்களுக்கு கதை கேட்பது முதல் டெக்னீசியன்களை தேர்வு செய்வது வரை அனைத்திலும் எஸ்ஏசியின் தலையீடு இருந்தது. ஆனால் எஸ்ஏசியின் அரசியல் ஆசை இவை அனைத்திற்கும் தற்போது முட்டுக்கட்டையாகியுள்ளது. எப்போது பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க விஜயை எஸ்ஏசி சம்மதிக்க வைத்தாரோ அப்போது முதலே தந்தை – மகன் இடையே பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. அதிலும் புலி திரைப்பட வெளியீடு சமயத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனை விஜயை அதிர வைத்தது. பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தும் மத்திய அரசு தன்னை துன்புறுத்தியதை விஜயால் ஏற்க முடியவில்லை.

2011ல் ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடு எடுத்து தேர்தல் பணிகள் செய்த நிலையில் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா விஜயை ஓட ஓட விரட்டினார். இப்படி இரண்டு முக்கியமான அரசியல் நிலைப்பாடுகளுமே தனக்கு எதிரான அமைந்த நிலையில் இதற்கு தனது தந்தையின் முட்டாள்தனம் தான் காரணம் என்கிற முடிவுக்கு விஜய் வந்தார். இதன் பிறகே தந்தையிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்த விஜய் தற்போது முழுவதுமாக ஒதுங்கியுள்ளார். ஏற்கனவே விஜய் தனது தந்தை எஸ்ஏசியிடம் பேசுவதில்லை என்று கூறியிருந்தோம். அதனை நேற்றைய தனியார் தொலைக்காட்சி பேட்டியில் விஜயின் தாயார் உறுதி செய்துவிட்டார்.

இதன் மூலம் விஜயின் குடும்பத்தில் உள்ள பிரச்சனை தற்போது வீதிக்கு வந்துள்ளது. தன்னை வளர்த்துவிட்ட தந்தையிடம் விஜய் பேசக்கூட செய்வதில்லையே ஏன்? என்பது தான் தற்போதைய ஹாட் டாபிக். தனது தந்தையின் சகவாசமே வேண்டாம் என்று தான் விஜய் சாலிகிராமத்தில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு நீலாங்கரைக்கு குடியேறியதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் எஸ்ஏசி அரசியல் ரீதியாக விஜயை தொந்தரவு செய்வது தான் என்று சொல்லப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் சொத்து தொடர்பான சில சிக்கல்களும் விஜய் குடும்பத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

விஜய் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை தனது சம்பாத்யத்தில் ஒரு பகுதியை தந்தையிடம் கொடுத்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததாக சொல்கிறார்கள். வருமான வரிச்சோதனையை தொடர்ந்து அதில் விஜய்க்கு சில சந்தேகம் எழுந்துள்ளது. அதனை எஸ்ஏசி தீர்த்து வைக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதனை அடுத்து தனது வரவு செலவு விவகாரங்களை விஜய் தனது குடும்பத்திற்குள்ளாகவே வைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார். இப்படி பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்தில் தொடர்ந்து எழுந்து வந்த சூழலில் கடந்த 2 வருடங்களாகவே எஸ்ஏசிக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது.

எப்படியாவது தமிழக அரசியல் களத்தில் கால் பதித்துவிட வேண்டும், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று எஸ்ஏசி துடியாய் துடிக்கிறார். இதற்கு தனது மகனின் ரசிகர்களை பயன்படுத்த எஸ்ஏசி தீவிரமாக திட்டம் தீட்டி வருகிறார். ஆனால் விஜய் இதில் உடன்படி மறுப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே தந்தை சொல்வதை கேட்டு இரண்டு முறை சிக்கலில் சிக்கியதை விஜய் மறக்கவில்லை. இதனால் தான் தந்தையின் அரசியல் சகவசாம் மட்டும் அல்ல தந்தையின் சகவாசமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதற்கிடையே தந்தையுடன் மட்டும் அல்ல மனைவியுடனும் எஸ்ஏசிக்கு டெர்ம்ஸ் சரியில்லை என்கிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்கு ஷோபா அளித்த பேட்டியில் எந்த இடத்திலும் எனது கணவர் என்றோ எனது கணவர்எஸ்ஏசி என்றோ கூறவில்லை. மாறாக எஸ்ஏசி கேட்டார், கூறினார் என்று மட்டுமே ஷோபா பேசியுள்ளார். கணவரை கணவர் என்று கூட கூறாமல் ஷோபா வெறும் பெயரை மட்டும் பயன்படுத்தியதும் கூட விஜய் குடும்பத்தில் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிவிப்பதாக உள்ளது.