தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சூழ்நிலைக்கு தக்கபடி மாறுவது தானே ஒரு அரசியல்வாதியின் ராஜ தந்திரமாக கருதப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பல வியத்தகு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடித்தவர் நாட்டை ஆளக்கூடாது. 

படித்தவன் தான் நாட்டை ஆள வேண்டும் என நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆக்ரோஷமாக எதிர்த்து பேசிவந்த பாமாக தன்னுடைய போக்கீலும் திடீர் மாற்றங்களை தற்போது செய்திருக்கிறது. 

பாமாக தலைவர் ராமதாஸ் ஆகட்டும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகட்டும் இருவருமே நடிகர்கள் அரசியலுக்கு வருவதை குறித்து எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை உடையவர்கள் தான். அதற்கு ஏற்ப நடிகர்கள் நிஜத்தில் சண்டை போடும் அளவிற்கு வலுவானவர்கள் இல்லை. சினிமாவில் ஒரு நோஞ்சான் நடிகர் கூட எதிரிகளை பந்தாடுவார். 

என்னிடம் அவரை மோதச்சொன்னால் கதையே வேறு என்பது போலெல்லாம் கூட அன்புமணி சவடால் பேசி இருக்கிறார்.
ஆனால் தற்போது பாமக தன்னுடைய அரசியல் போக்கில் புதுப்பாதையை பிடித்திருக்கிறது. ஏற்கனவே 2016 சட்ட மன்ற தேர்தலின் போது மூக்குடைபட்டு போன காரணத்தால் இனி வரும் தேர்தலில் தங்களுக்கான இடத்தை வலுப்பெற செய்திட ஆவன் செய்து வருகிறது பாமக. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது நடிகர்களை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த தந்தையும் மகனும். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் பாமகவில் இணைந்திருக்கிறார். 

இணைந்த உடனேயே அவருக்கு பாமகவின் மாநில துணைத்தலைவர் பதவியை கொடுத்திருக்கிறார் ராமதாஸ். இது அவரது அரசியல் கொள்கையில் முற்றிலும் புதுமையான ஒரு சம்பவம் தான். அது மட்டுமல்லாமல் பாமகவில் அடுத்ததாக் சந்தானமும் இணைய வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த தகவலின் படி சந்தானத்திற்கும் பாமக கட்சிக்கும் இடையே ஒரு நல்ல உடன்பாடு இருந்து வருகிறதாம். சந்தானத்தின் அப்பா இறந்தபோது கூட பாமக தலைவர் ராமதாஸ் நேரில் சென்று சந்தானத்திற்கு ஆறுதல் கூறி இருக்கிறார். அதே போல வெகு நாட்களுக்கு முன்னர் சந்தானத்திற்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட விவகாரத்தில் கூட சந்தானத்திற்காக முன்வந்து உதவி இருக்கிறது பாமக. அதே போல எப்போதும் தான் பாமக பக்கம் தான் என்று சந்தானம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரஞ்சித் பாமகவில் இணைந்தது போல சந்தானாமும் பாமகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை தான்.