1990 ல் செம்பருத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ரோஜா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத லேடி ஸ்டாராக ரோஜா விளங்கினார். கடந்த பல வருடங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆந்திராவில் தீவிர அரசியலில் குதித்தார்.

ஆந்திராவின் நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சார்ந்த, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்தான் இப்போது ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ளது. ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட போது அவர் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ரோஜாவுக்கு எந்த பதவியும் கொடுக்கப்பட்வில்லை.

இந்த நிலையில்தான், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு, ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வாரி வழங்கியுள்ளார்.அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் பதவிக்கு ஈடாக இப்படி ஒரு பதவியை ஜெகன் மோகடன வழங்கியுள்ளார். 

இந்த பதவி அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டது என்றாலும், தற்போது அவரது சம்பளம் மற்றும் அதிகாங்கள் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி ரோஜாவுக்கு, மாத ஊதியமாக, ரூ.2 லட்சம் கிடைக்கும். வாகன படி என்பதன் கீழ் ரூ .60,000, தங்குமிடத்திற்கு ரூ .50000, தனிப்பட்ட சலுகையாக, ரூ. 70000, மொபைல் கட்டணங்களுக்கு ரூ.2000 ரோஜாவுக்கு வழங்கப்படும். ஆக மொத்தம், 3.82 லட்சம் ரூபாய் ரோஜாவுக்கு கிடைக்கப்போகிறது.