இ பாஸ் வாங்காமல் கேளப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் சென்ற ரஜினி புகைப்படம் வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தவாறே சொகுசு கார் ஒன்றை ஓட்டி செல்லும் போட்டோ இணையத்தில் வைரலாகியது. அதை கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

ரஜினி காரில் சென்ற புகைப்படம் வைரலானதோ, இல்லையோ…? அவர் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் வாங்கினாரா..? என்ற விவகாரம் பூதாகரமாகியது. மேலும், அவர் இ-பாஸ் வாங்கினாரா.? இல்லையா..? என்பது குறித்து ஆய்வு செய்த பிறகே தெரிய வரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இ-பாஸில் விண்ணப்பித்து, அனுமதி கிடைத்த பிறகு இன்று மீண்டும் குடும்பத்தினரை சந்திக்க ரஜினிகாந்த் கேளம்பாக்கம் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக அவர் வாங்கிய இ-பாஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மருத்துவக் காரணங்களுக்கு செல்வதாகவும், இன்று ஒரு தினம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.ஏற்கனவே, கேளம்பாக்கம் சென்று வந்த விவகாரத்தில் இ-பாஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை அதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே இ-பாஸின் நகலை வெளியிட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.முதலில் இபாஸ் வாங்கிச் சென்றாரா? இல்லையா? என்கிற விபரம் இதுவரைக்கு வெளியாக வில்லை. மாநகராட்சி கமிசனர் இபாஸ் காண்பிப்பதில் சிக்கலில் சிக்கியிருக்கிறார்.