தமது டெல்லி பயணத்தை முடித்த கையோடு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீரில் பிறந்து வட மாநிலங்களிலேயே இருந்த ஆளுநர், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை ஆளுநரை மிகவும் கவர்ந்துள்ளது. இங்குள்ள ஆன்மிக உணர்வு அவரை இழுத்துள்ளது. தமிழகத்தின் நன்மைக்காக எதை செய்யவும் தயாராக உள்ளேன் என ஆளுநர் கூறியதாக தெரிவித்தார். ஆளுநருடனான சந்திப்பின்போது அரசியல் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் கூற முடியாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

மேலும் செய்திகளுக்கு..அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

ஆளுநருடன் அரசியல் பேசியதாக தெரிவித்த ரஜினிகாந்த்தின் கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய மதிமுக தலைவர் வைகோ, 'மதிமுக புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக தான் இடையிலே கோவிட் காலத்தில் நான் சுற்றுபயணம் செய்யாமல் இருந்தேன்.

தற்போது இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் துவங்குவது இது தான் மதிமுகவின் ஜிப்ராண்டல் கோட்டை. ரஜினிகாந்த் - ஆர்.என் ரவி சந்திப்பு குறித்த கேள்விக்கு ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் பேசுறது அவருக்கே புரியாது என்று பதில் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு..பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?